fbpx
GeneralRETamil NewsTrending Nowworldஅரசியல்உலகம்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்தலாமா? உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்!

WHO about russias corona vaccine

ஜெனீவா:

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான உயிர் பலியை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு உலக நாடுகள் பல தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து கொரோனாவை முழுமையாக குணமாக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகளுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதித்ததாக செய்திகள் வெளியான நிலையில் உலகம் முழுவதும் இந்த மருந்தை வாங்க பல நாடுகள் ஆர்வமுடன் உள்ளன.

இந்திய அரசும் ரஷ்யாவின் மருந்தை வாங்குவது குறித்து  ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 குறித்து விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார நிறுவனம் கூறி இருப்பதாவது:

ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். ரஷ்ய தடுப்பூசிக்கு முன் தகுதி அளிக்கும் முன்னர் தேவையான பாதுகாப்பு அம்சம் மற்றும் திறனை கடுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close