காவிரி விவகாரத்தில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு!!?
புதுடில்லி: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டில்லியில் செயல்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கை குறித்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை, இன்று ‘மே 18 அல்லது வருகின்ற , மே 22, 23ம் தேதிகளில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.