முடியவே முடியாது…! செமஸ்டர் தேர்வு கட்டாயம்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
Semester exam will be conducted

டெல்லி:
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் 2வது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந் நிலையில் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யுஜிசி அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழியே மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.அதை உள்துறை பரிசீலித்து தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது.
உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானிய குழுவின் வழிமுறைகளின்படி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படவேண்டும்.தேர்வுகளை நடத்தும் போது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















