fbpx
GeneralRETrending Nowஇந்தியாஉலகம்

டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45000 கோடி வருமானம் இழப்பு…!

Rs. 45000 crore loss in china for tiktok ban

டெல்லி:

டிக் டாக் மீதான தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு  45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் பதற்றம் உருவாக இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் இந்த நடவடிக்கையால் கொதித்த இந்தியா, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக் டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. அதே நேரத்தில் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்து உள்ளது.

செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும்  ஒரு நிறுவனம் அளித்துள்ள புள்ளி விவரங்களின் படி,  மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close