RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
ஈதுல் பித்ர் எனும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்

முஸ்லிம்களின் ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையை முடித்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.