fbpx
RETrending Nowஇந்தியா

ஜூன்-1 முதல் ரயில்கள் இயக்கப்படும்-இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

Railways To Run 200 Non-AC Trains Daily From June 1

ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கோரோனா தொற்று காரணமாக ரயில்,விமானம்,பேருந்து போன்ற சேவைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு இருந்தது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வருகின்ற மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் முதல்கட்டமாக சுமார் 200 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்பட வாய்ப்புகள் இல்லை எனவும் முன்பு இயக்கப்பட்ட ரயில்கள் இயக்கவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுமுடக்கம் அறிவிக்கும் முன்பு ஒரு நாளைக்கு சுமார் 12,000 ரயில்கள் இயக்கப்பட்டது. மே 1 இல் இருந்து சுமார் 366 சிறப்பு ரயில்கள் புலம்பெர்ந்தவர்களுக்காக இயக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close