ரூ.40000 கோடிக்காக பிரதமருக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி…! என்னாச்சு?
Rahul Gandhi expresses gratitude to PM Modi
டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பிரதமர் மோடி ஒப்புதல் தந்துள்ளதால் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலருந்து நாட்டை மீட்க பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கணக்கான திட்டங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
இதற்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்து உள்ளார். அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரமதர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸின் தொலைநோக்குத் பார்வையை அவர் புரிந்துகொண்டார். அந்த திட்டத்தை அவர் ஊக்கப்படுத்தவும் செய்கிறார் என்று கூறி உள்ளார்.















