fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு..! மத்திய அரசு முடிவு!

QR code compulsory for medicines

டெல்லி:

போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் போலி மருந்துகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், QR கோடு பதிவு மூலம் மருந்துகளின் தெளிவான உள்ளடக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த QR கோடு பாதிப்பு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டதாம். ஆனால், சில மருந்து கம்பெனிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் இந்த QR  கோடு பாதிப்பு பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஆகையால் விரைவில்,  அனைத்து மருந்துகளிலும் QR கோடு பதிக்கும் அறிவிப்பு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close