fbpx
RETamil News

ஊரடங்கிற்க்கு பிறகு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்: இடைக்கால அறிக்கை தாக்கல்!!

சென்னை;

மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்த இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் இன்று அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020 முதல் 3.5.2020 வரை தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடை முறையில் இருந்து  வருகிறது.

3.5.2020க்கு பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகளை வகுக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) எஸ். கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்தது.,

அதன் அடிப்படையில்  இடைக்கால அறிக்கையை இன்று (1.5.2020) தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close