fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை!

சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி அவர்கள் கலந்துகொண்டார் அப்போது அவர் புல்வாமா தாக்குதல் பற்றி பேசினார், அதில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை உரிய தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்திற்கு தற்போது முடிவு காட்டும் நேரம் வந்து விட்டது.தற்போது நாம் அடைந்துள்ள இந்த வலியை பொறுத்து கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர் கூறினார்.

இந்த புல்வாமா தாக்குதலை அடுத்து அபிதாபியுல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூறியதாவது;

” இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மீண்டும் அபாய நிலையில் வந்து விட்டது. வரும் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே அணு குண்டு தாக்குதல் நடைபெறாது. அப்படி நாம் (பாகிஸ்தான்) இந்தியா மெது ஒரு அணுகுண்டை வீசினால் அவர்கள் பதிலுக்கு 20 அணுகுண்டுகளை வீசி நம்மை அழித்து விடுவார்கள் என்று கூறினார்.

புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள அறிக்கை;

தற்போது இந்தியாவில் தேர்தல் காரணமாக சமாதான நடவடிக்கைகள் மழுங்கியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் உடனடியாக நடவடிக்கையை எடுக்கிறோம்.மேலும் பிரதமர் மோடி அவர்கள் சமாதானத்திற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல் முன்னர் பிப்.19-ஆம் தேதி பேட்டியளித்த போது அவர் கூறியதாவது ,

புல்வாமா தாக்குதல் குறித்து தகுந்த ஆதாரங்களை கொடுத்தால் மட்டுமே ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் இந்த தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்க நினைத்தாள் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம் என இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close