புயல் பாதித்த பகுதிகளுக்கு பயணிக்கும் பிரதமர் மோடி…! இழப்பீடு அறிவிப்பாரா?
PM Modi may visit wet Bengal and odhisha

டெல்லி: மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை அம்பன் புயல் தாக்கியதில் கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. 72 பேர் பலியாகி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
விளைநிலங்கள் நீரில் மூழ்க, பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட அம்பன், ஒடிசாவையும் விடவில்லை. மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந் நிலையில், பிரதமர் மோடி இன்று விமானத்தில் பறந்தபடி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவாரா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு, அவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.















