fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு!

Part time teacher’s salary issue

சென்னை:

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை ‘‘2, 3, 4, 5, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட வேண்டும். அதிக மாணவர்கள் கொண்ட பள்ளியில் இரண்டு, மூன்று  கவுண்டர்களில் பாடநூல்கள் வழங்க வேண்டும்.

1 மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என்ற கால அட்டவணையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து வழங்க வேண்டும். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 12,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . மாதச் சம்பளமாக 7 ஆயிரத்து 800 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close