fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்

11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விவகாரம்…! ஓபிஎஸ் விளக்கம்…!

OPS explanation about 11 mla disqualification case

சென்னை:

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

2017ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எனக்கு எந்தவித உத்தரவும் கொறாடாவிடம் இருந்து வரவில்லை.

மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு தான் முதலமைச்சராக பொறுப்பேற்றதாகவும் அதற்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளால், அதிமுக இரண்டு அணிகளாக தான் பிளவுபட்டது.

அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் கூட இரண்டு அணிகள் என அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. எனவே எப்போதும் நான் ஒரு அதிமுக உறுப்பினர் ஆக செயல்படுகிறேன். கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எப்போதும் நான் எடுத்ததில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close