fbpx
RETechnologyTrending Now

எட்டு பேர் ஒரே நேரத்தில் வீடியோகால் பேசலாம்! வாட்ஸ்அப் அதிரடி

Now eight persons can have video call conferencing : Whatsapp new update

 

வாட்ஸ்அப்பில் தற்போது 4 நபர்கள் வரை மட்டுமே வீடியோ காலில் இணைந்து கொள்ள முடியும், ஆனால் இனி “8 நபர்கள் ” வரை இணைந்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியை தற்பொழுது வாட்ஸ்அப் பீட்டா(Beta) பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்த வாட்ஸ்அப் அப்டேட் பீட்டா சோதனைக்குப் பிறகு தனது அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது சூம் (Zoom) என்ற செயலி தனது பயனாளர்களுக்கு” 100 நபர்கள்” வரை வீடியோ கால் மூலம் இனணந்து கொள்ளும் வசதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த வாட்ஸ் அப் நிறுவனம் இந்த வசதியை அனைத்து பயனாளர்களுக்கும் கொண்டு வந்தால் மற்ற செயலியில் இருந்து பல பயனாளர்கள் வாட்ஸ்அப்பிற்கு மாறலாம் என கருதப்படுகிறது.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களிடம் இந்த வசதியை பற்றி விளக்கம் கேட்டதற்கு ? எங்களுக்கு வாட்ஸ் அப் ஸ்டேடஸ் 15 விநாடிகளில் இருந்து ” 30 விநாடிகள்” வேண்டும், என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close