fbpx
RETamil Newsஇந்தியா

சொந்த ஊர் வரும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம் இல்லை…! முதலமைச்சர் திடீர் அறிவிப்பு

No train fare for bihar students says nithish kumar

பாட்னா: வெளிமாநிலங்களில் இருந்து பீகார் வரும் மாணவர்கள், ரயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த உத்தரவு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந் நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது: மாணவர்களுக்கான ரயில் கட்டணத்தை ரயில்வே துறைக்கு பீகார் அரசே நேரடியாக செலுத்தி விடும்.

அதுபோல், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள்,  ரயில் நிலையத்தில் இருந்து அவரவர் வட்டாரத்தின் தலைமையகத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

அங்கு 21 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். அதன்பிறகு ரயில் கட்டணத்துக்கு செலவளித்த தொகை முழுமையாக திருப்பி தரப்படும். அத்துடன், கூடுதலாக தலா ரூ.500 வழங்கப்படும் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close