fbpx
RETechnology

இம்மாத இறுதிக்குள் வாட்ஸ் அப் இல் கிடைக்க இருக்கும் புதிய சலுகை!

வாட்ஸ்அப்  PAYMENT  செயலி சேவை இம் மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் அதன் கட்டண சேவைக்காக மூன்று தனியார் வங்கிகளுடன் ஒன்று சேரும் என்று கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை இருக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது

வாட்ஸ்அப்  அதன் முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, அதன் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை இந்தியாவில் வெளியிடத் தயாராகிவிட்டது.

வாட்ஸ்அப் அதன் யுபிஐ அடிப்படையிலான கட்டண சேவையை இயக்க தேசிய உரிமக் கழகம் (NPCI) சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் டிஜிட்டல் கட்டண சேவை எவ்வாறாயினும், வாட்ஸ்அப்-ன் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் கட்டண சேவை ஒரு கட்டமாக  மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி வாட்ஸ்அப் PAY அம்சம் ஆரம்பத்தில் முதல் கட்டமாக சுமார் 1கோடி பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

இதற்குப் பின் பாக்கி உள்ள ஒப்புதல் வழங்கப்பட்டபின் அனைவருக்கும் வாட்ஸ்அப் PAYஅறிமுகபடுத்தபடும்.

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் சுமார் 400 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதால், வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை சந்தையை பெரியதாக உருவாக்கும் என்று நம்புகிறது.

இது ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகிள் பே, வால்மார்ட்டின் ஃபோன்பே, அலிபாபாவின் பேடிஎம் மற்றும் அமேசான் பே ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசேஜிங்-ல் இனி பேமெண்ட் செய்யலாம் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப்-ன் டிஜிட்டல் கட்டண முறை பயனர்கள், மற்றவர்களுக்குப் பணம் செலுத்த முடியும் அல்லது தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய சலுகையை வழங்கும்.

வாட்ஸ்அப் PAYMENT  சேவை, வாட்ஸ்அப் மெசேஜிங் பயன்பாட்டிலேயே  சேர்க்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

FACEBOOK  தனது கட்டண தீர்வை இந்தியாவில் அறிமுகப்படுத்த பல சிக்கல்களை எதிர்கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.

2018 ஆம் ஆண்டில், வாட்ஸ்அப் ஐசிஐசிஐ வங்கியுடன் ஒத்துழைத்து அதன் வாட்ஸ்அப் பே அம்சத்தை 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் சோதித்தது. இருப்பினும், இந்திய அரசு இரண்டு சந்தேகங்களை எழுப்பியது.

கட்டண தீர்வுகள் கட்டுப்படுத்தப்படுவது தொலைதூர விதிகளை மீறுகிறதா இல்லையா என்பது குறித்தும் ரிசர்வ் வங்கியின் கருத்துக்களை அரசாங்கம் கேட்டுள்ளது.

தரவு உள்ளூர் மயமாக்கல் கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப்பை அரசாங்கம் கேள்வி கேட்கத்தொடங்கியது.

இந்நிலையில் வாட்ஸ்அப் பேமென்ட் செயலி இம்மாத இறுதிக்குள் வரவிருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close