fbpx
RETechnologyஇந்தியா

வெண்டிலேட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது மாருதி சுஸுகி

Maruti Suzuki in a joint venture with agva healthcare in the production of Ventilators

கொரோனா தொற்று தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதனால் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது.  அங்கு மக்கள் கொத்து கொத்தாக இறந்து மடிகின்றனர். இந்த வகையில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது.

இதனால் வெண்டிலேட்டர்கள் தயாரித்து தரும்படி உலகநாடுகள் அனைத்தும் ஆட்டோமொபைல் நிறுவனங்களை நாடி உள்ளனர். உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான போர்ட், டெஸ்லா உள்ளீட்ட பல நிறுவனங்கள் மாஸ்க் மற்றும் வெண்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்தியாவிலும் தற்பொழுது மாஸ்க் மற்றும் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ளது. அதனால் இந்திய அரசானது இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களை நாடியுள்ளது.

தற்பொழுது சுஸுகி அக்வா ஹெல்த்கேர்(agva healthcare) நிறுவனத்துடன் இணைந்து வெண்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. அக்வா ஹெல்த்கேர் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வெண்டிலேட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். தற்பொழுது இந்த இரு நிறுவனமும் இணைந்து சுமார் 1,500 யூனிட் வென்டிலேட்டர்களை 20 நாட்களிலையே தயாரித்து உள்ளனர். தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close