fbpx
RETamil Newsஇந்தியா

இந்தியாவிற்கு ஈரான் எச்சரிக்கை!

Iran warns India

டில்லி;

ஈரான் நாட்டின் சபாகர் துறைமுக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வதாக ஏற்கனவே உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத  இந்தியாவுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.பிறகு ஈரானுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தது. அத்துடன் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அந்நாட்டுடன் எந்த ஒரு வர்த்தக உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளது.

நேற்று டில்லியில் அனைத்திந்திய சிறுபான்மையினர் முன்னணி மாநாடு நடைபெற்றது. அதில் ஈரான் நாட்டு தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் பங்கேற்றார். அப்பொழுது அவர் பேசும்பொழுது,இந்தியா எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்காமல் சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து வாங்கினால் ஈரான் அளித்துவரும் அத்தனை சலுகைகளும் முற்றிலும் இழக்க வேண்டியது வரும்.

எங்கள் நாட்டில் சபாகர் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு முதலீடு செய்வதாக இந்தியா வாக்களித்திருந்தது. ஆனால் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை. முன்பு இந்தியாவுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்த போது ஈரான் இந்தியாவுக்கு உதவியது. ஆனால் இப்போது ஈரானை அம்போ என விட்டு விட்டு அமெரிக்காவுடன் உறவு வைத்துக்கொள்ள இந்தியா நினைக்கிறது.

உடனடியாக இந்தியா எங்கள் துறைமுக விரிவாக்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும். இல்லையெனில் ஈரான் இந்தியாவுக்கு அளித்து வரும் அத்தனை சிறப்பு உரிமைகளையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close