தீவிரவாதிகள் மீது இந்திய விமான படை தாக்குதல் பலர் பலி!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது என்ற இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில் இந்த பயங்கர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் , ஆக்ரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட் என்ற இடத்தில் நுழைந்து அந்த பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடத்தப்பட்டதாகவும், 12 மீராட்ஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டி சென்று 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமான படையல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்தி குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலை நடத்திய இந்தியவிமான படை எந்த சேதமும் இல்லாமல் திரும்பி இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும் போது , எல்லையை தாண்டி இந்திய விமானங்கள் ஊடுருவியதாகவும் , பாகிஸ்தான் விமான படை அதை விரட்டியதாகவும் கூறியுள்ளார்.















