fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்தியா..!கொரோனா பாதிப்பில் நான்காம் இடம் பிடித்து சாதனை..!

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் இப்பொழுது உள்ள நிலவரப்படி 2,93,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

மே 24 அன்று பட்டியலில் 10 இடத்தில் இருந்த இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது இடத்தை அடைய 18 நாட்கள் மட்டுமே ஆகி உள்ளது. ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்தை நெருங்கி பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ரஷ்யாவில் தற்போது 4.93 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் இந்த எண்ணிக்கையானது 7.72 லட்சமாக உள்ளது.

அமெரிக்கா இப்பொழுதும் முதலிடத்தில் உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close