fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

இந்திய-சீன எல்லை பிரச்னை…! நள்ளிரவு வரை நீடித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

India, china border issue sparks again

டெல்லி:

இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. சமீபத்தில், லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அந்த பள்ளதாக்கு, எங்களுக்கு சொந்தமானது என, சீனா கூறி வருகிறது.

இந்த பிரச்னையை தீர்க்க இரு நாட்டு ராணுவ லெப்டினட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந் நிலையில், நேற்று2ம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியான சூஷூல் என்ற பகுதியில் தொடங்கியது.

பேச்சுவார்த்தை தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்தது.ஏப்ரலுக்கு முந்தைய நிலைப்பாடு தொடர வேண்டும். எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தத்தை சீனா மதிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Tags

Related Articles

Back to top button
Close
Close