fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் குண்டுவெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ,அதன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா செக்டரில் உள்ள லாம் பகுதியில் ராணுவவீரர்கள் எப்போதும் செய்வதுபோல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சில பயங்கர தீவிரவாதிகள் அந்த ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் செய்தனர். இந்த கோர தாக்குதலில் ராணுவ மேஜர் உட்பட 2 வீரர்கள் பலியாகினர். மேலும் இரு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close