தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திக்கிறேன் : திருநாவுக்கரசர் பளிச்!!!

சென்னை: இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுப்பட்டிருந்தாலும் விமர்சிக்க விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

3வது நீதிபதி தீர்ப்பு வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார்.

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்தார்.

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.