fbpx
RETamil NewsTechnologyஉலகம்

கொரோனா நபரை சந்திக்க போகிறீர்கள்;இந்த லிங்க் வந்தால் என்ன செய்வது?

கொரோனா பாதித்த நபரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள்!என லிங்க் வந்தால் அதனை அவசப்பட்டு கிளிக் செய்து விட  வேண்டாம்.

அது ஒரு வைரஸ் லிங்க். உங்கள் இணைய  கணக்குகளை முற்றிலும்  முடக்க இவ்வாறு செய்யப்படுகிறது.

இதுபோல கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இணையத்தில் இணையவாசிகளை பயமுறுத்த பல போலி செய்திகள் உலா வருகின்றன.

கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு இலவச மருத்துவ வசதி செய்து தரப்படும், நிதி அளிக்கப்படும் என சில விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

இதில் பல போலி கணக்குகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த விளம்பரங்களை கிளிக் செய்தால் உங்கள் வங்கி விபரங்கள் கேட்கப்படும். அல்லது அதுவாகவே எடுத்துகொள்ளும்.

இதனை நம்பி யாரும் விவரங்களை அளிக்க கூடாது.இது குறித்து அமெரிக்காவின் பெடரல் டிரேட் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருவதாக  தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சிகிச்சை நிதி குறித்து சில செல்போன் குறுஞ்செய்திகளும் இ-மெயில்கலும் இதில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

நாம் எந்த நாட்டினராக இருந்தாலும் இவற்றை க்ளிக் செய்யாமல்  புறந்தள்ள வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள ஐம்பது மாகாணங்களில் இருந்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா குறித்த சைபர் கிரைம் புகார்கள் வந்த வண்ணமாக  உள்ளது.

இவற்றை விசாரிக்க  தனிக்குழுவும்  அமைக்கப்பட்டுள்ளது. சமூக விலகல் காலத்தில் இதுபோன்ற இணைய  மோசடிப்பேர்வழிகளிடம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலமிது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close