fbpx
RETamil Newsஇந்தியா

30 வருடங்களாக தேநீர் மட்டுமே குடித்து உயிர் வாழும் ஓர் அற்புத பெண்மணி!

சட்டிஸ்கரில் கொரியா மாவட்டத்தில் உள்ள பாரதிய கிராமத்தில் பில்லி தேவி (வயது 44) என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது 11-வது வயது வரை  தான் உணவை சாப்பிட்டார் என்றும் அதன் பின் அவர் உணவு சாப்பிடுவதையே விட்டு விட்டார் என்றும் அனைவராலும் கூறப்படுகிறது.

இதைப்பற்றி அவரது தந்தை ரௌத்திரம் கூறியதாவது ; ஒரு நாள் என் மகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள சென்றாள். பின்னர் அவள் திரும்பி வரும் போது உணவு சாப்பிடுவதையும் , குடிநீர் அருந்துவதையும் முற்றிலுமாக நிறுத்திவிட்டாள் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் , அதன் பின்னர் அவள் பிஸ்கெட் மற்றும் ரொட்டியை தேநீருடன் சாப்பிட தொடங்கினாள். முக்கியமாக சூரியன் மறைந்த பின் நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே கருப்பு தேநீர் குடிக்க ஆரம்பித்தாள் என அவர் கூறினார்.

இதனால் பயந்துபோன அவளது குடும்பத்தினர் பல்வேறு மருத்துவமனைக்கு அவளை அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் அவரது இந்த செயலுக்கு என்ன காரணம் என்று யாராலும் கண்டறிய முடியவில்லை என்று அவரது சகோதரர் கூறினார்.

இது பற்றி மருத்துவர் குப்தா கூறியதாவது; இது ஒரு ஆச்சர்யம் அளிக்கக்கூடிய விஷயமாகும் . ஏனென்றால் விஞ்ஞான  ரீதியில் பார்த்தால் 33 ஆண்டுகளாக ஒரு மனிதரால் தேநீரை மட்டும் குடித்து உயிர் வாழ முடியாது. 33 வருடம் என்பது மிக நீண்ட காலம் இது சாத்தியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close