அமிதாப்பை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு!

மும்பை:
இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இன்றுவரை இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, அவர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது,
T 3590 -I have tested CoviD positive .. shifted to Hospital .. hospital informing authorities .. family and staff undergone tests , results awaited ..
All that have been in close proximity to me in the last 10 days are requested to please get themselves tested !— Amitabh Bachchan (@SrBachchan) July 11, 2020
நான் கொரோனா பரிசோதனை செய்தேன்.பாசிட்டிவாக வந்ததால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது.
.குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்துள்ளனர்.,
அதற்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
Earlier today both my father and I tested positive for COVID 19. Both of us having mild symptoms have been admitted to hospital. We have informed all the required authorities and our family and staff are all being tested. I request all to stay calm and not panic. Thank you. 🙏🏽
— Abhishek Bachchan (@juniorbachchan) July 11, 2020
இதையடுத்து, நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
















