fbpx
RETamil NewsTechnologyTrending Nowஇந்தியா

இனி நமது மொபைல் நம்பர் பத்து அல்ல பதினொன்று!-டிராய் அறிவிப்பு!!

டிராய்:

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்க எண்ணை 11 இலக்க எண்ணாக மாற்றுவதற்கு  பரிந்துரைத்துள்ளது.

மொபைல் எண்ணிற்கு முன்னதாக 9 என்ற எண் சேர்க்கப்படும் என்பதும் செய்தியாக வருகிறது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சுமார் 2.6 பில்லியன் புதிய எண்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி இணைப்புகளின் தேவைகளுக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று டிராய் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

இது குறித்து டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம்.

தற்போது லேண்ட் லைன் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன் பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய தொடர்பு எண்கள் வழங்குவது  மிகவும் எளிதாக இருக்கும்.

இதனடிப்படையில், 11 இலக்க எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி தொடர்பு எண்கள் புதிதாக வழங்க முடியும்.என்பதும் அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியாகும்.என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், டேட்டா பயணப்பாட்டிற்கு (மோடம் மற்றும் டாங்கில், இணைப்புகளுக்கு) மட்டும் பயன்படுத்தும் எண்களை 10 இலக்கங்களிலிருந்து 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரைத்து உள்ளதாக டிராய் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close