அறிவாலயத்தில் தி.மு.க., இன்று போட்டி சட்டசபை ; ஸ்டாலின் அறிவிப்பு!!
தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், இன்று(மே 30) போட்டி சட்ட சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், முதல்வர் பதவியிலிருந்து, பழனிசாமி விலகும் வரை, சட்டசபை நிகழ்ச்சியில், தி.மு.க., பங்கேற்காது என, அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
சட்டசபைக்கு செல்லாத, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் , அறிவாலயத்தில் இன்று நடக்கும் போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இன்று காலை, 9:30 மணிக்கு, போட்டி சட்டசபை கூட்டம், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆரம்பமாகிறது .
இன்று ஒரு நாள் மட்டும் கூட்டம் நடக்குமா அல்லது தொடர் கூட்டம் நடத்தப்படுமா என்பது, பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
போட்டி சபாநாயகர் துரைமுருகன், திருக்குறளை படித்து, கூட்டத்தை துவக்கி வைக்கிறார். காவிரி, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் மற்றும் தொகுதி பிரச்னைகள் குறித்த கேள்விகளை, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எழுப்ப உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவராக, ஸ்டாலின் பேசுகிறார். எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு, போட்டி அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
ஏற்கனவே, 2001, 2006ல், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது, தி.மு.க., சார்பில், போட்டி சட்டசபை கூட்டம், துரைமுருகன் தலைமையில் நடந்தது.
கடந்த, 2011ல், தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது, அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது, புதிய சட்டசபை வளாகத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு வெளியே போட்டி கூட்டம் நடத்தினர். அதில் சபாநாயகராக, ஜெயகுமார் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.