நடிகர் விஜயை நினைத்து வெட்கப்படும் அன்புமணி ராமதாஸ் எதற்க்காக?
நடிகர் விஜய் நடிக்கும் 62-ஆவது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் பெயரை படக்குழுவினர் ஒருநாள் முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டனர்.
சர்கார் என்ற தலைப்பு கொண்ட இந்த படத்தின் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.
இந்த போஸ்டர் குறித்து பாமக-வின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் மூன்று கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
முதல் ட்வீட்: நீங்கள் சிகெரெட் இல்லாமல் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள்.
2-ஆவது ட்வீட்: தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்கும் நடிகர் விஜயை நினைத்து வெட்கப்படுகிறேன்.
3-ஆவது ட்வீட்: நடிகர் விஜய் அன்புணி ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று இனிமேல் சிகரெட் பிடிப்பது போல் நடிக்க மாட்டேன் என்று பேட்டியளித்த செய்தித்தாளின் படத்தையும், விஜய் படத்தின் போஸ்டரையும் ஒப்பிட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சபாஷ் அன்புமணி!!!