டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.
51 வயதான கெஜ்ரிவால் இன்று கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் அவர் வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.

அவர் மிக நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலும் நாள்பட்ட இருமலால் அவதிப்படுகிறார், கடைசியாக ஞாயிற்றுக்கிழமை காலை ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
ஞாயிற்றுக்கிழமை மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்,
அங்கு எல்லைகள் திறத்தல் மற்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அவருக்கு இன்று எடுக்கும் கொரோனா பரிசோதனை முடிவில் தான் அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா? என்று தெரியவரும்.















