fbpx
REவிளையாட்டு

சட்டப்பூர்வமாகிறதா? கிரிக்கெட் சூதாட்டம்!

புதுடில்லி: விளையாட்டுப் போட்டிகளை அடிப்படையாக கொண்டு நடைபெறும் சூதாட்டத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாம் என லோதா குழு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

2013-ம் ஆண்டு ஐ.பி.எல்., போட்டியின்போது சூதாட்டம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன்  கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது.

விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.

இந்த வழக்கில், விளையாட்டை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை சட்டப்பூர்வமாக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி சவுகான் தலைமையிலான சட்ட ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. அதில், ‘விளையாட்டுகளை முன்வைத்து நடைபெறும் சூதாட்டம், பந்தயம் கட்டுதல் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கலாம்.

முறைப்படி உரிமம் அளித்து ஆதார், பான் விபரங்களை பெற்று உறுப்பினராக்கி கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்,ஆகிய பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளன.

இனி எந்த விளையாட்டு வீரர் யாரிடம் எவ்வளவு தொகையை பெற்றுக்கொண்டு விளையாடிவருகிறார்.என்பதை கண்டுபிடிக்க ஒரு லோதா குழு போல ஒரு குழுவை அமைக்க வேண்டுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close