இந்தியாவில் கொரோனாவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 2500-யை தொட்டது ; மக்கள் எச்சரிக்கை !!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளிலும் இந்த வைரஸானது பரவி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த தொற்று நோய் பரவலானது இரண்டு வாரங்களுக்கு பின்பு தான் அதிகரிக்கத்தொடங்கியது.அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தொற்றானது இரண்டு வாரங்களுக்கு பின் அதிகரித்து பரவ தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரஸ் பரவலானது பெருமளவில் அதிகரித்து வருகின்றது. இதன் பரவலானது அணைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றது. தமிழ்நாட்டில் 309 பேரும், மராட்டியத்தில் 335 பேர் பாதிப்படைந்துள்ளனர்.கேரளாவில் 286, டெல்லியில் 219, கர்நாடகாவில் 124, தெலுங்கானாவில் 107, உத்திரப்பேரதேசத்தில் 113, மத்திய பிரதேசத்தில் 99, ராஜஸ்தானில் 133 , குஜராத்தில் 87, ஆந்திராவில் 132, ஜம்மு காஷ்மீரில் 62, பஞ்சாபில் 46, ஹரியானாவில் 47 , பீகாரில் 24, மேற்கு வங்கத்தில் 53, சண்டிகரில் 16, லடாக்கில் 13 என பலர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த தொற்றின் வேகமானது கடந்த வாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தொற்றின் வேகமானது உலக அளவில் பார்க்கும் போது இந்தியாவில் சற்று மெதுவாகத்தான் உள்ளது. தற்போது வல்லரசு நாடான அமெரிக்காவில் இந்த கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு அதிகரித்து வருகின்றது.

உலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது 10 லட்சத்தையும் எட்டியதோடு மட்டுமல்லாமல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000-யம் தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாத்தொற்றின் தாக்கமானது அதிகரித்து கொண்டே வந்தால் , 21-நாள் ஊரடங்கு முடிவதற்குள் இந்த வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயுரத்தையும் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்றின் வேகமானது குறையுமா இல்லையா என்று கணிக்க இயலாது என தெரிவித்துள்ளனர்.
நேற்று பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸில் ஆற்றிய உரையில் கொரோனா வைரஸ் எதிரான போர் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது. எந்த ஒரு சிறு தவறும் நடந்துவிட கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் சுகாதார பணியாளர்கள், போலீசார், அரசாங்கம் போன்றோருக்கு மட்டும் தான் என்று மக்கள் எண்ணிவிட கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போர் என்று கருத வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டதில் இருந்து ஒரு மாதம் கழித்துதான் அதன் வேகம் கிடுகிடுவென அதிகரித்தது. 20,ஆயிரம் பேர் பாதிப்படைந்ததில் இருந்து ஆறே 6 நாட்களில் 85 ஆயுரத்தை எட்டியது. இதேபோல் தன இத்தாலியிலும் நடந்தது.
இந்த கொரோனவானது ஒருவர் தொடுதல் மூலமும் பரவக்கூடியது. மேலும் இந்த வைரஸின் அறிகுறி இல்லாமலேயே பலருக்கு பரவக்கூடியதாக உள்ளதால் பல்லாயிரம் பேர் இந்த வைரஸால் பாதிப்படையலாம் என்பதால் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என மற்ற நாடும் தெரிவித்துள்ளனர்.















