fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்!

4103233 corona test samples screened

டெல்லி:

தமிழகத்தில் மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. நாள்தோறும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 2வது இடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து, தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம். நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 11,094 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ளது.  தமிழகத்தில் ஒட்டு மொத்தம் 5,14,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 41,03,233 மாதிரிகள் கொரோனா பரிசோதனை உள்ளதா என்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 24  மணி நேரத்தில் 1,37,158 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close