fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

முதல்நாளில் வரவேற்பை பெறாத விமான சேவை…! 630 விமானங்கள் கேன்சல்!

Corona issue: 600 flights cancelled yesterday

டெல்லி:

நேற்று ஒரே நாளில் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. விமான சேவைகள் தொடங்கப்பட்ட போது நிபந்தனைகள் சிலவற்றை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழித்தடங்களில் செயல்படும் விமானங்களில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருந்தனர். குறைவான பயணிகள் உள்ள விமானங்கள் இயக்கப்படவில்லை.

நேற்று சென்னை-தூத்துக்குடி விமானம் பயணிகள் அதிகம் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதேபோல திருச்சி, சென்னை செல்லும்  2  இண்டிகோ விமானங்கள்  ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close