கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார்!!!
எடியூரப்பா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடகத்தின் முதலமைச்சராக குமாரசாமி 21-ந் தேதி பதவியேற்க உள்ளார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து கர்நாடக ஆளுனர் வஜூபாய் வாலா குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆளுனர் வஜூபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார். அதன்படி கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக 21-ந் தேதி பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் இந்த பதவியேற்பு விழாவிற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு காரணமான சோனியா காந்தி, ராகுல்காந்தி, சித்தராமையா ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக மேலும் குமாரசாமி தெரிவித்தார்.