முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு வாழ்த்துக்கள்:ராகுல்காந்தி கிண்டல்!!
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அஹமதாபாத் மாவட்ட கூடுறவு வங்கியில் பழைய ரூபாய் நோட்டு மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம், அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இயக்குநராக உள்ளார். 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்தின் போது இந்த வங்கியில் இருந்து 5 நாட்களுக்குள் ரூ.745 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அமித்ஷாஜிக்கு வாழ்த்துகாள், அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநராக இருக்கிற உங்களுடைய வங்கி, 5 நாட்களுக்குள் ரூ.745 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அழிக்கப்பட்டது. உங்களுடைய இந்த சாதனைகளுக்கு பெரிய சல்யூட்.” என்று பதிவிட்டு அமித்ஷாவையும் பாஜக ஆட்சியையும் கிண்டல் செய்துள்ளார்.
அதன் கீழே, அமித்ஷாவின் படத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை அதிக அளவில் பெறப்பட்ட வங்கியின் இயக்குநர் என்றும் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 81 சதவிகிதம் நிதி அதிகரித்த கட்சியின் தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.