fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு…! இந்தியாவை அழைக்கும் சீனா!

China invites bilateral talk for ladakh issue

டெல்லி :

கருத்து வேறுபாடுகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் தீர்வு காணலாம்  என்று சீன துாதர், சன் வெய்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தி நிறுவனத்திற்கு, அவர் அளித்த பேட்டி: கிழக்கு லடாக் பிரச்னை தொடர்பாக எழுந்துள்ள வேறுபாடுகளை சமாளித்து, தீர்வு காணும் ஆற்றல், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உள்ளது. இந்தியாதான், ஒப்பந்தத்தை மீறி, சீன ராணுவத்தினரை தாக்கியது.

பின்னர் நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் இறந்தனர். அதன் பின், சீனா திட்டமிட்டு, தாக்குதல் நடத்தியதாக, இந்தியா குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தியா அமைதியை விரும்புவதாகவும், அதை மீறுவோருக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

அதனால், லடாக்கில் பதற்றத்தை குறைப்பது இந்தியாவின் கையில் தான் உள்ளது. எல்லைப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க, சீனா தயாராக உள்ளது. ஆனால், இந்தியா, மோதல் போக்கை தேர்ந்தெடுத்தால், அது, தவறான பாதைக்கு வழி காட்டி விடும் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close