fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

செங்கல்பட்டை சேதப்படுத்தும் கொரோனா…! ஒரே நாளில் எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா..?

Chengalpattu cororna cases increases

சென்னை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனாலும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந் நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close