fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

ஒரு வழியாக வாய் திறந்த முதல்வர் – சாத்தான்குளம் சம்பவம் சிபிஐ விசாரணை.!

சேலம்;

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் போலீசாரால் அடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் இன்று ஒருவழியாக  அறிவித்தார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் போலீசாரால் அடித்தே கொன்ற விவகாரம் உலகம்  முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஆனால் பெயருக்கு கூட இது வரை எப் ஐ ஆர் கூட பதியாதது கடும் கண்டனங்களை எழுப்பிவருகிறது.

இந்த சம்பவம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தான் அவர் சஸ்பெண்டே செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.’ என கூறினார்.

இதற்கு முன்பு தந்தையும் மகனும் ஜுரத்தினால் இறந்தனர் என்று கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close