நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குப்பதிவு எந்திர மோசடியில் பாஜக ஈடுபடும்..மம்தா எச்சரிக்கை
கொல்கத்தா:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குப்பதிவு எந்திர மோசடியில் ஈடுபடும் என்று மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,முந்தைய தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றிப்பெற்றது,
இதை மீண்டும் செய்ய முயற்சிக்கும். 2019ம் ஆண்டி-ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை திருத்தியமைக்கும் வேலை தொடங்கியுள்ளது. இதில் விதிமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பழக்கம் ஏற்கனவே பாஜக.விடம் உள்ளது. அதனால் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். சமீபத்தில் மகேஷ்தோலாவில் தேர்தல் நடந்த போது 30 எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இத்தகைய செயல்களில் பாஜக எதிர்காலத்திலும் ஈடுபடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.