ஆகஸ்ட் 12 வரை அனைத்து ரயில்களும் ரத்து…! கொரோனா தாக்கத்தால் ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
All trains cancelled till Aug. 12th railway ministry announced

டெல்லி:
ஆகஸ்ட் 12ம் தேதி முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக பயணிகள், விரைவு ரயில்கள் ஜூலை 1 முதல் 12.08.2020 வரை ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
அதேநேரத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அந்த செய்திக் குறிப்பில் கூறி உள்ளது.
















