fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது – மண் குவளைகள்

15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த போது , ரெயில்நிலையங்களில் டீ ,காபி மற்றும் பலவற்றிற்காக மண் குவளைகளை அறிமுகம் செய்திருந்தார். ஆனால் அதை யாரும் சரியாக கடைபிடிக்கவில்லை பின்னர் அந்த முறை குறைந்து படிப்படியாக பிளாஸ்டிக் மற்றும் காகித கப் நடைமுறைக்கு வந்தது. தற்போது பிளாஸ்டிக் கப்புகளும் , தட்டுகளும் மனித உடலுக்கு கேடு விளைவிப்பதையும் , அதனால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் மக்கள் உணர்த்துள்ளனர். எனவே பல்வேறு இடங்களை பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு துணி பைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள , ரேபரேலி ரயில்நிலையங்களில் டீ,காபி, மற்றும் பல உணவுப்பொருட்களை தயாரித்து கொடுப்பவர்களிடம் மண் குவளைகள், டம்ளர்,மற்றும் தட்டுகளை பயன்படுத்துமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ;

சுற்றுசூழலுக்கு , மக்களின் உடலுக்கும் கேடு விளைவிக்காத , உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள் , தட்டுகள் போன்றவற்றில் தான் பயணிகளுக்கு உணவு பொருட்கள், டீ ,காபி போன்றவற்றை வழங்கவேண்டும் என்று மண்டலா ரெயில் நிலையங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய முயற்சியின் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற முயற்சியை நாடு முழுவதிலும் எடுப்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.இதன் மூலம் பழங்கால பழக்கங்களை நாம் நம் குழந்தைகளுக்கு சொல்வதுடன் அதன் நன்மைக்களையும் கூறமுடியும்.

Related Articles

Back to top button
Close
Close