fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்

பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனை!

புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து இருந்தனர்.இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இருந்தது தெரியவந்தது.

இதை அறிந்த நம் இந்திய விவசாயிகள் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் செயலை ஆரம்பித்தனர். மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் இருந்து பாகிஸ்தானுக்கு காய்கறி மற்றும் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் அனுப்புவது வழக்கம். இந்நிலையில் இந்திய விவசாயிகள் பாகிஸ்தானுக்கு காய்கறிகளை அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர்.

பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் அங்கு தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.250-ஆகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.160க்கும் , சிவப்பு மிளகாய் ரூ.300-க்கும் , இஞ்சி ரூ.150க்கும் , உருளைக்கிழங்கு ரூ. 70-க்கும் , வெங்காயம் ரூ.90க்கும், கத்தரி, வெண்டைக்காய் தலா ரூ.110-க்கும் விற்கப்படுகிறது.

மற்ற நாடுகளிடம் இருந்து பெறுவதைவிட இந்தியாவிடமிருந்து பெறப்படும் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலையில் பெற்று வந்தனர். தற்போது இந்தியாவிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் நிறுத்தப்பட்டதால் தான் பாகிஸ்தானில் தக்காளியின் விலை மிகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close