திறக்கப்படுகிறதா 40000 கோயில்கள்..? தமிழக அரசு அனுமதி!
40000 hindu Temples open for worship

சென்னை:
கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி தரப்படவில்லை.
கட்டுப்பாடுகளுடன், மத வழிபாட்டு தலங்களை திறக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரிய கோயில்களில் ஜூன் 1ம் தேதி முதல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து பக்தர்களும், சமூக விலகலை கடைபிடித்த, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.















