fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!

Violating 144 rules, 5 lakh riders arrested

சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24 மணி நேரத்தில் மட்டும் 4731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,03,777 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2911 வாகனங்கள்  24 மணி நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.

மொத்தமாக 6,39,40,044 கோடி  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 4,60,513 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்களுக்கு தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு வரிசைப்படி வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வாகனத்தை எடுக்க வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல்,  ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close