fbpx
REவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20:இந்தியா தோல்வி.

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோஹ்லி 47 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்து இரண்டு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி ஹேல்ஸ் 58 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். பேர்ஸ்டவ் 28 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி  நாளை நடைபெறும்.

தோணி விளையாடிய 500வது சர்வதேச போட்டி  இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் சச்சின் (664) ராகுல் டிராவிட்,(509) ஆகியோரை தொடர்ந்து தோனி தனது 500-வது சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close