RETamil News
24-ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 24-ஆம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.
இவ்வாறு கூடும் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கபப்படுகின்றது.
தூத்துக்குடியில் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று அந்த ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளில் அந்த ஸ்டெர்லைட் ஆலை ஈடுபட்டு வருகின்றது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை பற்றி கொள்கை முடிவு எடுக்க எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.















