fbpx
RETamil News

தமிழகத்தில் பாதிப்பு 1,755 ஆக அதிகரிப்பு! இன்று 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் புதிதாக 72  பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,683 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.;

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 114.

இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை 886.

இன்று மட்டும்  இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 72,403 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 65,834 நபர்களுக்கும் இன்று மட்டும் 5,882 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைக்கு பரிசோதனை மேற்கொண்ட 5,882 பேரில் புதிதாக 72 பேருக்கு கொரோனா  வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தமாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை  1,755 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25,503.

19 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159. தமிழகத்தில் 23 பரிசோதனை அரசு ஆய்வகங்கள்,

11 தனியார் ஆய்வகங்கள் என மொத்தமாக 34 ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் பாதிப்பு: 1,755

இன்று பலி எண்ணிக்கை:02

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 22

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை:114

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 866

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close