fbpx
REScienceTamil Newsஉலகம்

14 கால் கொண்ட கடல் கரப்பான் பூச்சி!

இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் 14 கால் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது.மேற்கு ஜாவாவில் உள்ள பான்டென் கடற்கரைக்கு அருகே சிங்கப்பூர் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பீட்டர் என்ஜி மேற்கொண்டார்.

பாத்தினோமஸ் ரக்ஸாசா (Bathynomus Raksasa) என்று பெயரிடப்பட்ட இந்த உயிரினம் ஒரு தனித்துவம் வாய்ந்த ‘மாபெரும் ஐசோபாட்’  உயிரினமாக கருதப்படுகிறது. இந்த ,ஐசோபாட்டின் அளவு 20 அங்குலங்கள். இது, விஞ்ஞான ரீதியாக நண்டுகள் மற்றும் இறால்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஹைடெக் கோரிங் மற்றும் அகழ்வாராய்ச்சி சாதனங்களின் உதவியுடன், சுமார் 800 மீட்டர் ஆழத்தில், ஆயிரக்கணக்கான உயிரனங்கள் கடலில் இருந்து எடுக்கப்பட்டன.இதில், சில உயிரனங்கள் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் கீழே இருந்து வந்தன.அதில் ஒன்றுதான், இந்த மாபெரும் “கடலின் கரப்பான் பூச்சி”

அவர் இதை பற்றி குறிப்பிடுகையில், இது ஸ்டார் வார்ஸின் டார்ட் வேடர் என்ற கற்பனைக் கதாபாத்திரத்துடன் பொருத்தமாக உள்ளது என்றார். “புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய சாதனையாகும்”  என்று இந்தோனேசிய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த கயோ ரமாடி கூறியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close