fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

13 வெயிட்டர் வேலைக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்த கொடுமை!!

மும்பை:

மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா கேன்டீனில் வேலை செய்வதற்கு 13 வெயிட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடத்தை நிரப்புவதற்க்காக ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. இந்த வேலைக்கான கல்வி தகுதி வெறும் 4-ஆம் வகுப்புதான் ஆனால் இந்த வேலைக்காக 7 ஆயிரம் பேர் விண்ணப்பம் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் விண்ணப்பம் செய்தவர்களில் அதிகமானோர் பட்டதாரிகள் என்பதால் அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது.

இந்த வெயிட்டர் பணிக்கான தேர்வு கடந்த 31-ஆம் தேதி நடத்தப்பட்டு,அதில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் 12 பேர் பட்டதாரிகள் , ஒருவர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

மந்திராலய கேன்டீனில் பணி செய்ய பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்க்கட்சி தலைவர் தன்ஜாய் முண்டே கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

வெறும் 13 பணி இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளது நாட்டில் எவ்வளவு வெளியுள்ள திண்டாட்டம் உள்ளது என்பதை காட்டுகிறது.

மந்திரிகளும், அரசு வேலை பார்ப்பவர்கலும் கேன்டீனில் வேலைசெய்யும் பட்டதாரிகளிடம் டீ,காபி மற்றும் உணவு வாங்கி சாப்பிடும்போது அவர்கள் என்ன உணருவார்கள் என்று எனக்கு தெரியவேண்டும்.

இது மிகவும் வேதனைக்குரிய தருணம். முன்பு பிரதமர் மோடி தன்னுடைய பதவி காலத்தில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியது என்ன ஆனது.

கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் அதில் 65 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பு இழப்பு, ஜி எஸ் டி போன்றவை சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பெரிதும் பாதித்ததால் வேலையின்மை அதிகரித்துவிட்டது என அவர் சாடியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close